யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த பேருந்திலிருந்த தணிகாசலம் பத்மநிகேதன் என்பவர் குறித்த விபரங்கள் இன்னமும் கிடைக்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்திதெரிவித்துள்ளார்.

யாழில் இருந்து புறப்பட்ட பேரூந்தில் பயணித்த தணிகாசலம் பத்மநிகேதன் என்பவர் மீட்கப்பட்மை தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. மீட்கப்பட்ட அவருடைய தேசிய அட்டையை நொச்சியாகம பிரதேச செயலாளர் எனக்கு அனுப்பி இருக்கிறார். நீர் மட்டம் இன்னும் குறையாத படியால் மேலதிக விபரங்கள் தெரியவில்லை.
நொச்சியாகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் இவர் இல்லை என்பதை என்னிடம் தெரிவித்தார்.
என அவர் குறிப்பிட்டுள்ளார்
