டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட துயரமான உயிர் இழப்பு மற்றும் பரவலான பேரழிவு குறித்து இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடி மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இந்தத் தேவைப்படும் நேரத்தில் இலங்கை மக்களுக்கு இந்தியா உறுதியான ஆதரவுடன் துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து இந்தியா வழங்கிய உதவிக்கு ஜனாதிபதி திசாநாயக்க தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்ததுடன்இ மீட்புக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்பியமைக்கு பாராட்டுத் தெரிவித்தார். இந்தியாவின் சரியான நேரத்திலான மற்றும் பயனுள்ள பதிலளிப்பு முயற்சிகளுக்காக இலங்கை மக்களின் பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார்.
தற்போது நடந்து வரும் ‘சாகர் பந்து'( நடவடிக்கையின் கீழ் ஆபத்தில் உள்ளவர்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணத்தை வழங்குவதன் மூலம் இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு இருக்கும் என்று பிரதமர் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு உறுதியளித்தார்.
இலங்கை புனரமைப்பு முயற்சிகளை மேற்கொள்ளும்போதும் பொதுச் சேவைகளை மீண்டும் தொடங்கும்போதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும்போதும் இந்தியா தனது ‘மகாசாகர் நோக்கு’ மற்றும் ‘முதல் பதிலளிப்பவர்’ என்ற தனது நிலைப்பாட்டிற்கு ஏற்ப வரும் நாட்களில் அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் தொடர்ந்து வழங்கும் என்று அவர் உறுதியளித்தார்
