இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு வரும் பாக்கிஸ்தான் விமானம் – தனது வான்வெளியை பயன்படுத்த இந்தியா அனுமதி

இருதரப்பு உறவுகளில் நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க மனிதாபிமான நடவடிக்கையாக இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கான நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பாகிஸ்தானிய நிவாரண விமானம் அதன் வான்வெளியைக் கடக்க இந்தியா திங்களன்று அனுமதி வழங்கியது என்று இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தனது முறையான கோரிக்கையை டிசம்பர் 1 2025 அன்று இந்திய நேரப்படி மதியம் 13:00 மணியளவில் சமர்ப்பித்தது. இந்திய அதிகாரிகள் அதற்கு முன்னுரிமை அளித்து அன்றைய தினமே மாலை 17:30 மணியளவில் அனுமதி வழங்கினர். இந்த முழு நடைமுறையும் சுமார் நான்கு மணி நேரத்தில் நிறைவடைந்தது.என்று இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து ஏப்ரல்-மே மாதங்களில் நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்தும் அதன் பின்னர் இந்தியா மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான ‘ஆபரேஷன் சிந்தூர்’ மற்றும் பாகிஸ்தானின் தாக்குதலுக்குப் பிறகும் இரு நாடுகளும் பரஸ்பரம் வான்வெளியை மூடியுள்ளன. இருப்பினும் இந்த முடிவு முற்றிலும் மனிதாபிமானக் கருத்தினால் எடுக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான சில பாகிஸ்தான் ஊடகச் செய்திகள் தவறானவை.என்று இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு ஆதரவளிக்க ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற பெயரில் இந்தியா ஒரு பெரிய பேரிடர் நிவாரண முயற்சியை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில் விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். உதயகிரி ) மற்றும் கடலோர ரோந்துக் கப்பலான சுகன்யா ஆகியவை ஈடுபட்டு நிவாரணப் பொருட்களை வழங்கின.
இயக்கப்பட்ட சேத்தக் ஹெலிகாப்டர்கள் மற்றும் இந்திய விமானப்படையின் ஆi-17 ஹெலிகாப்டர்கள் இலங்கை விமானப்படையுடன் ஒருங்கிணைந்து கர்ப்பிணிப் பெண்கள் கைக்குழந்தைகள் மற்றும் ஆபத்தான நிலையில் காயமடைந்தவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான சிக்கித் தவித்தவர்களை வான்வழியாக மீட்டன. ஒரு பாகிஸ்தான் குடிமகன் உட்பட பல வெளிநாட்டுப் பிரஜைகளும் மீட்கப்பட்டனர். இந்தியா இதுவரை 53 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்