இன்று (02) வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
காலை வேளையில் மேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த உள்ளூர் காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
