இந்திய தேசியப் பேரிடர் மீட்புப் படை குழுக்கள் மற்றும் இந்திய விமானப்படையின்Mi-17 ஹெலிகாப்டர்கள் பல பகுதிகளில் சிக்கித் தவித்த 143 இலங்கை மக்களை மீட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 01 அன்று முதியவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் கைக்குழந்தைகள் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மற்றும் செல்லப்பிராணிகள் உட்பட அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவித்த 43 பேரை மீட்டதாக இந்திய தேசியப் பேரிடர் மீட்புப் படைஅந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் இரண்டு Mi-17 ஹெலிகாப்டர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குழந்தைகள் மற்றும் மிகவும் ஆபத்தான நிலையில் காயமடைந்த 3 பேர் உட்பட 96 பேரை மீட்டன. மேலும் இந்த ஹெலிகாப்டர்கள் 5.5 டன்னுக்கும் அதிகமான உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வான்வழியாகக் கொண்டு சென்றன.
பதுளையில்இந்திய தேசியப் பேரிடர் மீட்புப் படை குழு 5 அடிக்கும் அதிகமான ஆழத்தில் உள்ள இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒரு சடலத்தை மீட்டது. இந்த இடத்தில் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இரண்டாவது இந்திய விமானப்படையின் C-130J விமானம் ‘ 10 டன் உயர் முன்னுரிமை மருத்துவ மற்றும் பேரிடர்-பதிலளிப்புப் பொருட்களைக் கொண்டு வந்தது. “இந்த கச்சிதமான மற்றும் மிகவும் நீடித்த நடமாடும் மருத்துவ அலகுகள்( பேரிடர் பாதித்த பகுதிகளில் விரைவான அவசரகால சிகிச்சையை வழங்க உதவுகின்றன” என்று அந்த அறிக்கை கூறியது.

“கட்டுநாயக்கவில் இலங்கை விமானப்படை மருத்துவ அதிகாரிகளுக்கான பயிற்சிக்குப் பிறகு அவசர மருத்துவ நிவாரணத்தை வழங்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் பீஷ்ம் அலகுகள் இப்போது நிலைநிறுத்தப்பட உள்ளன.”
மேலும் 12 டன் அத்தியாவசிய நிவாரண உதவிகள் திருகோணமலைக்கு வந்து சேர்ந்தன. ஐ.என்.எஸ். சுகன்யா கப்பல் 12 டன் நிவாரணப் பொருட்களை திருகோணமலைக்கு கொண்டு வந்தது.
