இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் பாகிஸ்தான் விமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக இந்தியா முன்னதாகக் கூறிய போதிலும்இ போதுமான அளவு விமானப்பாதைத் தெளிவு இல்லாமையால் தமது நிவாரண விமானம் பயணத்தை தொடரமுடியாத நிலையில் உள்ளது என பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வழங்கப்பட்ட அனுமதி விமானம் கொழும்புக்குச் சென்று திரும்புவதற்கான போதுமான நேரத்தை வழங்காததால் விமானம் புறப்பட முடியாமல் போனது என்று தெரிவித்துள்ளது.
இலங்கைக்குத் தேவைப்படும் இச் சமயத்தில் ஆதரவளிப்பதற்காக தேசிய வளங்களை உடனடியாக அணிதிரட்டுமாறு உத்தரவிட்ட பாகிஸ்தான் பிரதமரின் விசேட பணிப்புரைகளின் பேரில் பாகிஸ்தானின் நிவாரண நடவடிக்கை தொடங்கப்பட்டது. நவம்பர் 29 முதல் கொழும்பில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் பாகிஸ்தான் ஆயுதப் படைகளும் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார சபையும் இலங்கையில் விரிவான நிவாரண முயற்சிகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளன.என இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது
எவ்வாறாயினும் முழு வசதிகளுடன் கூடிய நகர்ப்புறத் தேடல் மற்றும் மீட்புக் குழு கள மருத்துவமனைகள் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் மற்றும் கிட்டத்தட்ட 200 டன் உயிர் காக்கும் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றிச் செல்லும் விமானம் அடங்கிய தமது அவசரகால நிவாரணப் பணி இரண்டு நாட்களுக்கும் மேலாக இஸ்லாமாபாத்தில் உள்ள நூர் கான் விமான தளத்தில்காத்திருப்பதாகவும் . விமான அனுமதி வழங்குவதில் இந்தியா தாமதப்படுத்தும் தந்திரங்களைப் பயன்படுத்துவதாகவும் இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது
இந்தியா டிசம்பர் 1 ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு ஒரு நாள் இராஜதந்திர அனுமதியை வழங்கியதாகவும் சுமார் ஆறு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் இது விமானம் கொழும்புக்குச் சென்று திரும்புவதற்குப் போதுமானதாக இல்லை என்றும் பாகிஸ்தான் கூறுகிறது. இந்திய அதிகாரிகள் தேவையான ஆவணங்களைப் பெற்றிருந்தும் விமானத் திட்டங்களை மீண்டும் சமர்ப்பிக்குமாறு மற்றும் வழித்தடத்தை மாற்றுமாறும் மீண்டும் மீண்டும் கோரியதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் மேலும் கூறுகின்றனர்.
“இந்த நடைமுறைக் குறைபாடுகள் மேலும் தாமதத்தை ஏற்படுத்தி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அண்டை நாட்டிற்கு உரிய நேரத்தில் நிவாரணம் வழங்குவதைத் தடுப்பதாகத் தோன்றுகிறது” என்றுஇலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது
இந்தியாவின் நடவடிக்கைகள் நிறுவப்பட்ட மனிதாபிமான விதிமுறைகள் ஐ.நா வழிகாட்டும் கொள்கைகள் மற்றும் சார்க் மனிதாபிமான சாசனக் கொள்கைகள் ஆகியவற்றைப் புறக்கணிப்பதாக உயர் ஸ்தானிகராலயம் குற்றம் சாட்டியதுடன் இத்தகைய நடத்தையை “உணர்ச்சியற்றது” மற்றும் “அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்றும் அழைத்தது.
இலங்கை கடற்பரப்பில் ஏற்கனவே உள்ள பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிவாரண நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் இது பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆதரவுக்கு அமைய அமைந்துள்ளது என்றும் அது மேலும் கூறியது.
பாகிஸ்தான் நிவாரணப் பொருட்களுடன் பல விமானங்களை அனுப்ப உத்தேசித்துள்ளதாகவும் இந்த பணியை அரசியல் மயமாக்காமல் உடனடியாகவும் நடைமுறைக்கு ஏற்றபடியும் வான்வெளியை அணுக இந்தியா அனுமதித்து “ஒரு பொறுப்பான மற்றும் மனிதாபிமான அணுகுமுறையை” ) ஏற்கும் என்று நம்புவதாகவும் பாகிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தற்போதைய நெருக்கடியின் போது இந்த உதவி “பாகிஸ்தான் தேசத்தின் மனமார்ந்த ஆதரவைப்” பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டு இலங்கைக்கு பாகிஸ்தான் அளிக்கும் ஒற்றுமையை அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
