டிசம்பர் 3, 2025
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின்படி, இன்று காலை வேளையில் மேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய சேதங்களைக் குறைத்துக் கொள்ளப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை, திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும்.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்று தென்மேற்காகவும், மற்றைய கடற்பரப்புகளில் காற்று மாறிமாறியும் வீசக்கூடும். காற்றின் வேகம் 25-35 கி.மீ/மணித்தியாலயத்தில் இருக்கும்.
கடற்பரப்புகள் லேசானது முதல் மிதமானதாக இருக்கலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த இடிமின்னல் காற்றும், மிகவும் கொந்தளிப்பான கடலும் எதிர்பார்க்கப்படலாம்