சூறாவளியால் பாதிக்கப்பட்ட தொழில்துறைக்கு உடனடி நிவாரணம்: ரூ. 3 பில்லியன் ஒதுக்கீடு

டித்வாசூறாவளியால்காரணமாக இலங்கை முழுவதும் உள்ள 416 உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு மொத்த சேதத்தில் 25% உடனடியாக வழங்குவதற்கு அமைச்சு முன்மொழிந்துள்ளது.

தற்போது, ஒரு தரவு சேகரிப்பு முறைமையைப் பயன்படுத்தி புனரமைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழிற்சாலை உரிமையாளர்கள் தங்களது சேத விபரங்களை டிசம்பர் 16 ஆம் திகதிக்கு முன்னர் 071 266 6660 என்ற துரித இலக்கத்தின் (hotline) மூலம் அறிவிக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

கம்பஹா, கொழும்பு, புத்தளம், திருகோணமலை, கேகாலை, குருநாகல், மாத்தறை, கண்டி மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் பதிவாகியுள்ளன.

இந்தத் தொழில்களை மீண்டும் கட்டியெழுப்ப ஆதரவளிப்பதற்காக, அமைச்சு ரூ. 3 பில்லியன் திருப்பிச் செலுத்தத் தேவையில்லாத மானியங்களை (non-repayable subsidies) ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை விடுவிப்பதற்காக அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல தொழிலதிபர்கள், விரைவான மீட்சியை எளிதாக்குவதற்கு நீர், மின்சாரம் மற்றும் வீதி உள்கட்டமைப்பை மீட்டெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்