வடக்கு மாகாணத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்குக் கரங்கொடுத்து, அவர்களை மீட்டெடுத்து வாழ்வாதாரத்தை உறுதி செய்வது எமது தார்மீகப் பொறுப்பாகும்-வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்குக் கரங்கொடுத்து, அவர்களை மீட்டெடுத்து வாழ்வாதாரத்தை உறுதி செய்வது எமது தார்மீகப் பொறுப்பாகும். பாதிக்கப்பட்ட மக்கள் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்புவதை உறுதி செய்யும் அதேவேளை, மாகாணத்தின் வருடாந்த அபிவிருத்தித் திட்டங்களையும் எவ்வித தாமதமுமின்றித் துரித கதியில் நிறைவு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்  நா.வேதநாயகன்  அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் அனைத்துத் திணைக்களத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடனான அவசர உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் காலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கலந்துரையாடலில் உரையாற்றிய ஆளுநர், ஒவ்வொரு மாவட்டமும் வௌ;வேறு விதமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. குறிப்பாக உடைப்பெடுத்த குளங்களை அண்மித்த பகுதிகளில் மக்கள் மிகப்பெரிய இழப்புகளைச் சந்தித்துள்ளனர். பாதிக்கப்பட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் இயல்பு நிலையைத் துரிதமாக ஏற்படுத்த வேண்டும் என்பதே  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் உறுதியான வலியுறுத்தலாகும்.
அதிகாரிகள் தற்துணிவுடன் செயற்பட வேண்டும். உங்களிடம் நேர்மை இருக்குமாயின், எதற்கும் அஞ்சத் தேவையில்லை. துணிந்து முடிவுகளை எடுங்கள். உங்களின் தயக்கத்தாலோ அல்லது தற்துணிவின்மையாலோ மக்களுக்கான சேவைகள் ஒருபோதும் தாமதமடையக்கூடாது, எனச் சுட்டிக்காட்டினார்.
விவசாய மற்றும் கால்நடை இழப்பீடுகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஆளுநர், ‘பாதிக்கப்பட்ட மக்கள் தமது இழப்புக்களைப் பதிவு செய்ய அலுவலகங்களுக்கு வரும்வரை காத்திருக்க வேண்டாம். நீங்களே நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுப் பதிவுகளை மேற்கொள்ளுங்கள். அத்துடன், மீள் விதைப்புச் செய்யக்கூடிய இடங்களில் அதற்கான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுங்கள்.
நிதியை விடுவிப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. அரச சுற்றறிக்கைகளுக்கு அப்பால் வடக்கு மாகாணத்துக்கு விசேட நிதியுதவி தேவைப்படின், அதனைக் கோருவதற்கும் நாம் தயாராக உள்ளோம். வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதியாகி நிற்கும் மக்களை மீளக்கட்டியெழுப்புவது நம் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும், என்றார்.
விவசாயம் மற்றும் கால்நடைத் துறை சவால்கள் இதன்போது கருத்துத் தெரிவித்த விவசாய அமைச்சின் செயலாளர், வெள்ளம் காரணமாக வயல் நிலங்களில் குவிந்துள்ள வீதி எச்சங்களை அகற்றுதல், மீள் விதைப்புச் செய்வதிலுள்ள சிக்கல்கள் மற்றும் பயிர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்த் தாக்கங்கள் குறித்தும், அதனால் எதிர்காலத்தில் விளைச்சல் குறையக்கூடிய அபாயம் குறித்தும் விளக்கமளித்தார்.
அதேவேளை, கால்நடைகளுக்கான தொடர் சிகிச்சை முகாம்கள் நடத்தப்படுவதாகவும், மருந்துகள் இலவசமாக வழங்கப்படுவதாகவும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் தெரிவித்தார்.
மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் பேரிடரால் ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்தும் ஒவ்வொரு அமைச்சு
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை