டித்வாசூறாவளி நாடு முழுவதும் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளது பல குடும்பங்கள் இன்னும் தங்கள் அத்தியாவசிய தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடி வருகின்றன-ஐநா

ஐக்கிய நாடுகள்  கடந்த நவம்பர் 28 அன்று கரையைக் கடந்த ‘டித்வாசூறாவளி இலங்கையின் பதிலளிப்பை வலுப்படுத்த, மத்திய அவசரகால பதில் நிதியிலிருந்து (CERF) 4.5 மில்லியன் அமெரிக்க டாலர் (1.38 பில்லியன் இலங்கை ரூபாய்) நிதியை ஒதுக்கியுள்ளது.

இந்த நிதியானது, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசரகால உணவு உதவி, தங்குமிட ஆதரவு, மற்றும் நீர், சுகாதாரம் மற்றும் துப்புரவு சேவைகளை விரைவாக அதிகரிக்க ஐ.நா.வுக்கு உதவும்.

இலங்கையின் பல்வேறு சமூகங்கள் புயலின் பரவலான தாக்கங்களுடன் தொடர்ந்து போராடி வருகின்றன. வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட பாரிய சேதத்திற்குப் பிறகு, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னும் இடம்பெயர்ந்துள்ளனர். நிவாரண முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதும், டித்வாசூறாவளி விளைவுகள் ஆரம்பத்தில் புரிந்துகொண்டதை விட பரந்ததாகவும், மிகவும் கடுமையானதாகவும் இருக்கின்றன என்று சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதனால், பல சமூகங்களுக்கு ‘டித்வாசூறாவளியிலிருந்து முழுமையாக மீண்டு வர நிலையான ஆதரவு அவசரமாகத் தேவைப்படுகிறது.

“இந்த நிதி இலங்கைக்கு ஒரு முக்கியமான நேரத்தில் வந்துள்ளது,” என்று இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்சே (Marc-André Franche) கூறினார். “தித்வா  முழுவதும் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளது, பல குடும்பங்கள் இன்னும் தங்கள் அத்தியாவசிய தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடி வருகின்றன. ஐ.நா. உடனடி நிவாரணப் பொருட்கள் மற்றும் உபகரணங்களுடன் விரைவாக ஆதரவு அளித்தது. ஆதாரங்கள் மற்றும் முன்னுரிமை தேவைகளால் வழிநடத்தப்படும் ஒருங்கிணைந்த பதிலளிப்பை உறுதிப்படுத்த, நாங்கள் அரசாங்கம், சிவில் சமூகப் பங்காளர்கள் மற்றும் இலங்கையில் உள்ள மனிதாபிமான சமூகத்துடன் நெருக்கமாக பணியாற்றுகிறோம். இந்த அவசரகால நிதி, மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களை அவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் ஆதரவுடன் சென்றடைய எங்களுக்கு உதவும்.”

ஐ.நா.வின் உலகளாவிய அவசரகால நிதியான CERF ஆனது, திடீர் நெருக்கடியின் ஆரம்ப கட்டங்களில் உயிர் காக்கும், மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க, மனிதாபிமான பதிலளிப்பாளர்களுக்கு விரைவான நிதியை செயல்படுத்துகிறது.

பேரழிவின் முழுமையான அளவு தெளிவாகும்போது, ஐ.நா. தனது உயிர் காக்கும் உதவியை கடுமையாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு விரிவுபடுத்தும். இதற்காக, ஒரு பரந்த மனிதாபிமான முன்னுரிமைகள் திட்டம் (Humanitarian Priorities Plan) இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை