REUTERS
கடும் சூறாவளியால் உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததால் மத்திய இலங்கையின் கித்துள்பத்தகிராமவாசிகள் பலர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். தங்கள் வீடுகளுக்குத் திரும்புவது பாதுகாப்பற்றதாக உணர்வதால் தாங்கள் ஆதரவற்ற நிலையில் விடப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த புயல் பலத்த காற்று மற்றும் ஒரு தசாப்தத்தில் இல்லாத மிக மோசமான வெள்ளத்தைக் கொண்டு வந்தது. இதில் சுமார் 479 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். அரசாங்கத் தரவுகளின்படி மேலும் 350 பேரைக் காணவில்லை.
சூறாவளியின் விளைவாக பூமியில் ஆழமான விரிசல்களும் வீடுகளில் சுவர்களில் பிளவுகளும் ஏற்பட்டுள்ளதால் நிவாரண வசதிகளில் உள்ள பலர் அங்கேயே தங்கி வருகின்றனர்.
தேயிலைத் தோட்டங்களுக்கிடையே மலைகளின் மத்தியில் அமைந்துள்ள ஒரு ரம்மியமான கிராமமான கித்துள்பத்தயைச் சேர்ந்த 57 வயதான மதுல்லேகெடே சந்திரலதா கூறுகையில் “மக்கள் வீட்டிற்குச் செல்ல பயப்படுகிறார்கள் அவர்கள் பாதுகாப்பாக உணரவில்லை” என்றார்.
அரசாங்கத்தின் கூற்றுப்படி நாடு முழுவதும் மொத்தம் 1289 வீடுகள் ‘ சூறாவளியால் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன மேலும் 44500 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு “நீண்ட கால தீர்வுகளை” வழங்குவதற்காக அரசாங்கம் தரவுகளைச் சேகரித்து வருகிறது.

சர்வதேச நாணய நிதியம் இந்த அனர்த்தத்திற்குப் பிறகு நாட்டின் பொருளாதாரத் தேவைகளை மதிப்பிட்டு வருவதாகக் கூறியது. அத்துடன் அக்டோபரில் பணியாளர்களுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட தற்போதைய கடன் திட்டத்தின் கடைசி மதிப்பாய்வை விவாதிக்கஇ டிசம்பர் 15 அன்று ஒரு குழு கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
.
உதவி இன்றி இடமாற்றம் சாத்தியமில்லை: கிராமவாசிகள் கூறுகின்றனர்
பிரசன்ன சாந்த குமாராவின் வீடும் பாதிக்கப்பட்டவற்றில் ஒன்றாகும். அதன் வரவேற்பறையில் ஆழமான வெட்டுக்களும் சுவர்கள் பல இடங்களில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளன.
48 வயதான அவர் இப்போது தனது மனைவியுடனும் மூன்று குழந்தைகளுடனும் நிவாரண மையத்திற்கு மாறிவிட்டார். அங்கிருந்து தினமும் தனது வீட்டிற்குச் சென்று வெள்ளத்தால் சமன் செய்யப்பட்ட மற்றும் மெதுவாகச் செத்துக் கொண்டிருக்கும் தனது குடமிளகாய் பயிரை மீட்டெடுக்க முயற்சிக்கிறார்.
மற்ற பலரும் தங்கள் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மிளகாய் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிப் படுக்கைகளைப் பராமரிக்க இதேபோன்ற பயணத்தை தினமும் மேற்கொண்டு தங்கள் செல்லப்பிராணிகளைப் பார்த்துவிட்டு இரவு நேரங்களில் நிவாரண மையங்களுக்குத் திரும்புகின்றனர்.
“எனது வீட்டை இழந்துவிட்டேன் எனது பயிரையும் இழந்துவிட்டேன்… நாங்கள் என்ன செய்யப் போகிறோம்? இப்படி எப்படி வாழ முடியும்? எங்களுக்கு உதவி தேவை” என்று குமார ரொய்ட்டர்சிடம் தெரிவித்தார்.
அரசாங்கத்தால் நடத்தப்படும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் டாக்டர். காமினி ஜயதிஸ்ஸா அன்று நிலத்தில் பிளவுகள் உள்ள பகுதிகளை விட்டு வெளியேறுமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்தினார். புதிய மழை நிலச்சரிவுகளைத் தூண்டக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
கித்துள்பத்தேயின் குடியிருப்பாளர்கள் — இவர்களில் பெரும்பாலானோர் தேயிலை பறிப்பவர்கள் காய்கறிகள் பயிரிடுபவர்கள் மற்றும் ஆடுகள் வளர்ப்பவர்கள் போன்ற தினசரி கூலித் தொழிலாளர்கள் ஆவர் — தாங்களாகவே இடமாற்றம் செய்வதற்கான வாய்ப்பை நிராகரித்தனர்.
“நாங்கள் எங்கே போவது? எங்களைச் சுற்றிலும் மலைகள்தான் உள்ளன… எல்லாவற்றையும் விட்டுவிட்டு நாங்களே வேறு எங்காவது வாழ்க்கையை மறுதொடக்கம் செய்ய எங்களிடம் நிதி வசதி இல்லை” என்று 54 வயதான வசந்தி குமாரி கூறினார்.
