சூறாவளியால் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு தேசிய சபை அமைக்கக் கோரும் ஒரு பிரேரணையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கஐக்கிய மக்கள் சக்தி’ திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது.
நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தேசிய செயல் திட்டத்தை (யெவழையெட யஉவழைn pடயn) சிவில் சமூகப் பிரதிநிதிகளும் நிபுணர்களும் அண்மையில் விவாதித்திருந்தனர். இதற்காக ஒரு தேசிய அரசாங்கத்தை ) அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர்கள் விவாதித்திருந்தனர்.
இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது சாத்தியமில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சிகள் அடங்கிய தேசிய சபை ஒன்றை அமைப்பதுஇ எதிர்க்கட்சியும் அரசாங்கமும் இணைந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தேசிய செயல் திட்டத்தை கூட்டாகச் செயல்படுத்த சிறந்த வாய்ப்பை வழங்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.