அவுஸ்திரேலியாவின் பொன்டி கடற்கரையில் துப்பாக்கிசூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நபர் ஒருவரின் துப்பாக்கி பிரயோகத்தினை எதிர்கொண்டதாக நியுசவுத்வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பொன்டி கடற்கரையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ள சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பொலிஸ் வாகனங்கள் அந்த பகுதியை நோக்கி செல்வதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுமக்களை அந்த பகுதிக்கு செல்லவேண்டாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
