ஆஸ்திரேலியாவின் பொன்டி கடற்கரையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சாஜித் அக்ரம் (50) என்ற நபர்இந்தியாவின் ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகலவறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் தாக்குதல் நடத்தியதில் சாஜித் அக்ரம் என்பவர் ஹைதராபாத்தின் டோலிசவ்கி நகரத்தை பூர்வீகமாக கொண்டவர். கடந்த 1998-ம் ஆண்டு மாணவர் விசாவில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துவிட்டார்.
இவரது தந்தை கடந்த 2017-ம் ஆண்டில் இறந்தபோதுகூட இறுதி காரியங்களை செய்யவதற்காக சாஜித் அக்ரம் இந்தியாவுக்கு வரவில்லை. ஆனால், சாஜித் அக்ரமின் மகன் நவீது கடந்த 2001-ல் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். எனவே அவருக்கு அந்த நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது.