சூறாவளிக்கு பின்னர் இழப்புகள் இடையூறுகளுடன் வாழ்தல்

United Nations
Sri Lanka

டிட்வா சூறாவளி புத்தளம்மாவட்டத்தைச் சூறையாடிச் சென்ற பிறகு நேதுஷா மற்றும் லலிதா ஆகியோர் தங்கள் இழப்புகள் மற்றும் மாற்றங்களுக்கு மத்தியில் மீண்டு வருவதற்கான வழிகளைக் கண்டறிந்து வருகின்றனர்.

புத்தளம் மாவட்டத்தில் பலத்த மழையையும் வெள்ளத்தையும் டிட்வா சூறாவளி கொண்டு வந்தபோது நேதுஷா தனது பாட்டி லலிதாவுடன் வசித்து வந்தான். அவனது தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகத் தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் வீட்டிற்கு அனுப்பி வந்தார்.

வெள்ள நீர் உயர்ந்தபோது லலிதா நேதுஷாவை ஒரு மேடான பகுதிக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் திரும்பி வரும்போது தங்கள் வீடு அப்படியே இருக்கும் என்று நம்பினர். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அந்த வெள்ள நீர் அனைத்தையும் அடித்துச் சென்றதை அவர்கள் கண்டறிந்தனர்.

“நாங்கள் திரும்பி வந்தபோது வீடு முற்றிலும் இடிந்து கிடப்பதைக் கண்டோம்” என்று லலிதா பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

அடுத்தடுத்த நாட்களில் நேதுஷா யாரிடமும் பேசாமல் மிகவும் அமைதியானான். ஒரு காலத்தில் தனது வீடாக இருந்த அந்த இடிபாடுகளை நீண்ட நேரம் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருப்பான். அவனது வீடு தினசரி வாழ்க்கைமுறை மற்றும் பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றைத் திடீரென இழந்தது அவனைப் பெரிதும் பாதித்தது.

அவன் தனது குறிப்பேட்டில் இவ்வாறு எழுதினான்: “வெள்ளம் வந்தபோது என் அம்மா அருகில் இல்லாதது எனக்கு மிகவும் வருத்தமாகவும் பயமாகவும் இருந்தது.”

பின்னர் லலிதா அவனது வரிகளைப் படித்தபோதுதான் அந்தப் பாதிப்பு அவனது மனதை எவ்வளவு ஆழமாகத் தாக்கியிருக்கிறது என்பதை உணர்ந்தார்.

நேதுஷா எழுதியதைப் படித்தபோது அவன் எவ்வளவு வேதனையைத் தன் மனதிற்குள் சுமந்து கொண்டிருக்கிறான் என்பதை நான் உணர்ந்தேன்” என்று லலிதா கூறினார். “குறிப்பாக இவ்வளவு கடினமான ஒரு நேரத்தில் அவனது தாய் அருகில் இல்லாதது அந்த வேதனையை அதிகப்படுத்தியுள்ளது.”

நேதுஷாவைப் பொறுத்தவரை இந்த வெள்ளம் வெறும் சுவர்களையும் பொருட்களையும் மட்டும் அடித்துச் செல்லவில்லை. அது அவனது பாதுகாப்பு உணர்வையும் அதோடு சேர்த்து அவனது தாய் தியாகத்தாலும் அன்பினாலும் கட்டியெழுப்பிய அந்த ‘கனவு இல்லத்தையும்’ சிதைத்துவிட்டது.

புத்தளம்மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று
லலிதாவும் நேதுஷாவும் வசிக்கும் புத்தளம் மாவட்டம் டிட்வா சூறாவளியால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள நீர் வீடுகள் பள்ளிகள் சாலைகள் மற்றும் வாழ்வாதாரங்களைச் சேதப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடவு செய்யப்பட்ட நெல் வயல்கள் முற்றிலும் அழிந்துவிட்டன இது விவசாயக் குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பிற்கு உடனடி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

 

இன்னும் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்த நிலையிலேயே உள்ளனர். வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் தங்கியிருக்க பாதுகாப்பற்ற முறையிலும் இருப்பதால் குடும்பங்கள் தங்கள் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவி கிடைக்கும் வரை தற்காலிகக் கூடாரங்களிலும் தங்குமிடங்களிலும் வசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

“வீட்டின் சுவர்கள் விரிசல் அடைந்துள்ளன இங்கே தங்குவது மிகவும் ஆபத்தானது” என்று லலிதா விளக்கினார். “தற்போதைக்கு இந்தத் தற்காலிகக் கூடாரம் மட்டுமே எங்களுக்கு உள்ளது.”

இந்தத் துயரத்திற்குப் பிந்தைய உடனடி நாட்களில் மக்கள் தங்களுக்குள் உணவு உடை மற்றும் தண்ணீரைப் பகிர்ந்து கொண்டு சிறந்த ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இருப்பினும் பாதுகாப்பான தங்குமிடம் கல்வி மற்றும் உளவியல் ரீதியான ஆதரவுக்கானத் தேவைகள் இன்னும் அவசரமாக உள்ளன.

“எங்கள் நாட்டில் மிகவும் தாராள மனதுடைய மற்றும் ஆதரவான மக்கள் உள்ளனர்” என்று லலிதா கூறினார். “ஆனால் எங்களுக்கு இன்னும் வசிப்பதற்கு ஒரு இடம் இல்லை.”

இழப்பு மற்றும் பாதிப்புகளுக்குப் பின் குழந்தைகள் மீண்டு வர உதவுதல்
சூறாவளியினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் திடீர் இடப்பெயர்வு கல்வித் தடை மற்றும் மன உளைச்சலை எதிர்கொண்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் யுனிசெஃப் அமைப்பு புத்தளம்மற்றும் ஏனைய பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்குக் கற்றல் உபகரணங்கள் உளவியல் ரீதியான ஆதரவு மற்றும் தற்காலிகக் கற்றல் இடங்களை வழங்கி வருகிறது. இத்தகைய தலையீடுகள் குழந்தைகள் மீண்டும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் தங்கள் அனுபவங்களிலிருந்து மீண்டு கல்வியைத் தொடரவும் உதவுகின்றன. நேதுஷாவைப் பொறுத்தவரை நிச்சயமற்ற இந்தச் சூழலில் இந்த ஆதரவு ஒரு நிலையான தன்மையை வழங்குகிறது.

களத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த நடவடிக்கை
ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்புகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு உதவி தற்காலிக தங்குமிடம் அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்கள் சுகாதார சேவைகள் மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்தல் மற்றும் வேலைவாய்ப்புக்கான ஆதரவும் வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து உதவிகளும் தேவைகளை விரைவாகக் கண்டறியும் மதிப்பீடுகளின் அடிப்படையில் தேசிய மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு உதவி கிடைப்பதை உறுதி செய்கிறது.

அவசரத் தேவைகளுக்குப் பதிலளித்தல்
டிட்வா சூறாவளிக்குப் பிந்தைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகஇ ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதாபிமானப் பங்காளிகள் இணைந்து “மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவ 35.3 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி கோரப்பட்டுள்ளது.

இத்திட்டமானது தங்குமிடம் உணவு சுகாதாரம் கல்வி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட உயிர் காக்கும் உடனடி உதவிகளில் கவனம் செலுத்துகிறது. அதே வேளையில் நேதுஷா போன்ற குடும்பங்கள் இந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கான ஆரம்பக்கட்ட ஆதரவையும் வழங்குகிறது.

சமூகங்கள் மீண்டு வரத் தொடங்கும்போது குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்யவும் குடும்பங்கள் பாதுகாப்பாக வீடுகளைக் கட்டியெழுப்பவும் எவரும் கைவிடப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் தொடர்ச்சியான ஆதரவு அவசியமாகும்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்