மொஸ்கோவில் குண்டுவெடிப்பு ஒன்றில் ரஷ்ய ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திங்கள்கிழமை காலை கார் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் லெப்டினன்ட் ஜெனரல் ஃபானில் சர்வரோவ்) உயிரிழந்ததாக ரஷ்யாவின் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. சர்வரோவ் ரஷ்ய ஆயுதப் படைகளின் செயல்பாட்டுப் பயிற்சித் துறையின் தலைவராக .பணியாற்றினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தில் உக்ரைனிய உளவு அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உக்ரைன் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
ரஷ்ய தலைநகரின் தெற்குப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடத்திற்குப் புலனாய்வாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
