இன்று மாலை நுகேகொடை மற்றும் கொஹுவலைக்கு இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து கொழும்பு நகரம் முழுவதும் காவல்துறை மேலதிக காவல்துறையினரை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
மூன்று சக்கர வண்டியில் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்காக களனி பாலம் வரைஇந்த தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரவு 8:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் உடனடியாக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவரை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் குறிப்பிட்ட பகுதிகளில் பயணிக்கும் போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
