டிட்வா’ சூறாவளியானது இலங்கையில் இதுவரை கண்டிராத அளவிலான தேசியப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும்இ இதன் காரணமாகப் பல துறைகளில் பாரிய பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
தொழில்துறை செயல்பாடுகள் விநியோகச் சங்கிலிகள் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தடைகள் ஒருங்கிணைந்த மீட்பு முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
இதற்குதீர்வை காண்பதற்காக முதலீட்டுச் சபையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடுவதிலும் விரைவான மீட்சிக்குத் தேவையான ஆதரவைக் கண்டறிவதிலும்முதலீட்டு சபை ஈடுபட்டுள்ளது.
சேதங்களிலிருந்து நிறுவனங்கள் மீண்டெழுவதற்கும்இ உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கும் தேவையான ஆதரவு குறித்து விரிவான மதிப்பீட்டை நடத்தி வருவதாக முதலீட்டு சபை தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இழப்புகளின் அளவு மற்றும் தன்மையைத் தீர்மானிக்க பாதிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து விரிவான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து முதலீட்டு சபை கேட்போர் கூடத்தில் ஒரு சிறப்புப் பாதிப்பு மதிப்பீட்டு மன்றம் நடைபெற்றது. இதில் ‘டிட்வா’ சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட 26 நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 36 பேர் கலந்துகொண்டனர். சொத்துக்கள் இயந்திரங்கள் உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து நேரடித் தகவல்களைப் பெறுவதும் சாத்தியமான ஆதரவு விருப்பங்களை ஆராய்வதுமே இந்த மன்றத்தின் முக்கிய நோக்கமாகும்.
நிர்வாகத்தின் உறுதிமொழி: இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முதலீட்டு சபை தலைவர் அர்ஜுன ஹேரத் மற்றும் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம். வீரக்கோன் ஆகியோர் இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட தொழில்துறைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக உறுதி அளித்தனர். நிறுவனங்கள் பின்னடைவுகளைக் கடந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் முதலீட்டு சபை வழங்கும் என அவர்கள் வலியுறுத்தினர்.
24ஃ7 ஆதரவு மையம்: பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடுகளைச் சீரமைக்கத் தொடர்ச்சியான மற்றும் விரைவான ஆதரவை வழங்குவதற்காக உலக வர்த்தக மையத்தின்) மேற்கு கோபுரத்தின் 6வது மாடியில் உள்ள முதலீட்டாளர் சேவைத் திணைக்களத்தில் 24ஃ7 மணிநேரமும் இயங்கும் ஆதரவுப் பிரிவு ஒன்றை முதலீட்டு சபை நிறுவவுள்ளது. இந்தப் பிரிவு இறக்குமதிஃஏற்றுமதி அனுமதிகள் மற்றும் சேதமடைந்த பொருட்களைக் கையாளுதல் போன்ற பணிகளில் உதவும்.
மேலும் பாதிக்கப்பட்ட வணிகங்களின் விரைவான மீட்சி மற்றும் நீண்டகால வெற்றியை உறுதி செய்வதற்காக நிதி அமைச்சூடன் இணைந்து முறையான கொள்கைகள் நிதியுதவி மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் முதலீட்டு சபைதலைவர் தெரிவித்தார்
