பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு துப்பாக்கியை தனது துப்பாக்கியை வழங்கினார் என்றகுற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை பதில் ஊடகப் பேச்சாளரின் கூற்றுப்படி, தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி (Pistol), பின்னர் பாதாள உலகத் தலைவரான மாகந்துரே மதூஷின் வசம் இருந்தது கண்டறியப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர், பிரபல பாதாள உலகக் குற்றவாளியான மதூஷ், 2020 ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
