செயலிழந்துள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்களை மீண்டும் இயக்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த முயற்சிக்கு இந்தியாவின் உதவியும் நாடப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவைத் தொடர்ந்து, சுனாமி ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களை எச்சரிப்பதற்காக இலங்கையின் கடலோரப் பகுதி முழுவதும் 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் நிறுவப்பட்டன.
இருப்பினும், இந்த கோபுரங்கள் அனைத்தும் தற்போது செயலிழந்து காணப்படுகின்றன