உக்ரைன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நோவ்கோரோட் (Novgorod) பிராந்தியத்தில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கிரெம்ளினின் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக இன்டர்ஃபாக்ஸ் (Interfax) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 28-29 தேதிகளில் 91 நீண்ட தூர ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைன் இந்தத் தாக்குதலை நடத்தியதாக லாவ்ரோவ் கூறினார், இருப்பினும் அதற்கான ஆதாரங்கள் எதனையும் அவர் முன்வைக்கவில்லை. “இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் பதிலடி கொடுக்கப்படாமல் போகாது” என்று கூறிய அவர், அனைத்து ட்ரோன்களும் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
