வாகன விலையை விட மூன்று மடங்கு வரி கோருவதால் 300 வாகனங்கள் துறைமுகத்தில் முடக்கம்: இறக்குமதியாளர்கள் குற்றச்சாட்டு

14 ஜனவரி 2026 | கொழும்பு

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சுமார் 300 புதிய வாகனங்கள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கின்றன. இந்த வாகனங்களை விடுவிப்பதற்கு, அவற்றின் அசல் விலையை விட மூன்று மடங்கு வரி செலுத்த வேண்டுமென இலங்கை சுங்கத் திணைக்களம் கோருவதாக தனிப்பட்ட இறக்குமதியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கொள்வனவு செய்த காலத்தில் இருந்த அனைத்து இறக்குமதி விதிகளையும் பின்பற்றியதாக வாகன உரிமையாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சுங்கத் திணைக்களம் தற்போது பொருந்தக்கூடிய சுங்கத் தீர்வைக்கு மேலதிகமாக 50 சதவீத கூடுதல் கட்டணம் உள்ளிட்ட உபரி வரிகளை விதித்துள்ளது. சில சந்தர்ப்பங்களில், ஒரு வாகனத்திற்கான மொத்த வரிப் பொறுப்பு 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாக இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நீண்டகால தாமதம் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட வரி கோரிக்கைகள் நியாயமற்றவை என உரிமையாளர்கள் வாதிடுகின்றனர். பல மாதங்களாக அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் கிடைக்காததால் அவர்கள் நிதி நெருக்கடிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

சிக்கலில் சிக்கிய தனிநபர் இறக்குமதியாளர்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ‘எல்லை தாண்டிய கடன் கடிதம்’ (Cross Border Letter of Credit – LC) முறையைப் பயன்படுத்தி இந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது இந்த வாகனங்கள் சட்ட மற்றும் நிர்வாக சிக்கல்களில் சிக்கியுள்ளதால், அவற்றை விடுவிப்பதற்கான தெளிவான திகதி எதுவும் தெரியவில்லை.

 செய்தியாளர் சந்திப்பில், பாதிக்கப்பட்ட இறக்குமதியாளர்கள் ஜனாதிபதி  தலையிட்டு தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், “நாங்கள் அனைத்தையும் சட்டப்பூர்வமாகவே செய்தோம். LC கட்டணங்கள், சுங்க வரி, துறைமுகக் கட்டணங்கள் மற்றும் தாமதக் கட்டணங்களை செலுத்தியுள்ளோம். ஆனால் எங்கள் வாகனங்கள் ஏன் இன்னும் துறைமுகத்திற்குள் இருக்கின்றன என்று எவருக்கும் விளக்கமளிக்கத் தெரியவில்லை” என்றார்.

பல உரிமையாளர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் ஒரு வாகனத்திற்காகச் செலவிட்டுள்ளனர். வாகனங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பிறகு விதிகள் மாற்றப்பட்டதால் அவர்கள் தற்போது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

சூறாவளி பாதிப்பும் மேலதிக அபராதமும் மற்றுமொரு இறக்குமதியாளர் கூறுகையில், “எங்கள் வாகனங்கள் ஆறு மாதங்களாக ஹம்பாந்தோட்டையில் உள்ளன. சமீபத்திய சூறாவளிக்கு பிறகு எங்கள் வாகனங்கள் இன்னும் அங்கு இருக்கிறதா என்பது கூட எங்களுக்குத் தெரியாது. சுங்கத் திணைக்களம் எங்களுக்கு எதையும் கூறுவதில்லை” என்று ஆதங்கப்பட்டார்.

மேலும், சுங்கத் தீர்வைக்கு மேலதிகமாக 50 சதவீத அபராதத்தை சுங்கம் கோருகிறது. இது வாகனத்தின் விலையைப் போல மூன்று மடங்கு அதிகமாகும். “நாங்கள் வாகன வியாபாரிகள் அல்ல, சாதாரண மக்கள். சேமிப்பிலும் கடனிலும் வாகனம் வாங்கினோம். இப்போது எங்களது தவற்றினால் அல்லாத தாமதங்களுக்கு நாங்கள் தண்டிக்கப்படுகிறோம்” என அவர்கள் தெரிவித்தனர்.

சுங்கத் திணைக்களத்தின் விளக்கம் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சாந்தன புஞ்சிஹேவா இது குறித்துக் கூறுகையில், இந்த வாகனங்கள் ‘எல்லை தாண்டிய LC’ இறக்குமதி தொடர்பான நீதிமன்ற வழக்கு ஒன்றின் ஒரு பகுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். இந்த வழக்கு முடியும் வரை வாகனங்களை விடுவிப்பதைத் தடுத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், உரிமையாளர்களுக்கு இரண்டு தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்:

  1. சாதாரண வரிகளைச் செலுத்தி வாகனங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். ஆனால் வழக்கு முடியும் வரை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்ய முடியாது.

  2. ‘எல்லை தாண்டிய LC’ விதிகளை மீறியதற்காக மேலதிக வரிகள் மற்றும் அபராதங்களைச் செலுத்தி இப்போதே வாகனத்தைப் பதிவு செய்யலாம்.

“நீதிமன்ற வழக்கு முடியும் வரை எங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால், இந்த பதில் உரிமையாளர்களுக்குத் திருப்தியளிக்கவில்லை. “எங்கள் வாகனங்களுக்கு முழுமையாகப் பணம் செலுத்தப்பட்டு சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இப்போது நாங்கள் அதிக பணத்தை இழக்க வேண்டும் அல்லது காலவரையற்ற காலம் வரை காத்திருக்க வேண்டும். இதில் எங்கே நீதி இருக்கிறது?” என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்