2026 ஜனவரி 14|
சுமார் 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களைச் சட்டவிரோதமாக ஈட்டியதாகக் குற்றம் சாட்டி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியுள்ளார்.
இதனையடுத்து, அவரைப் பிடியாணை மூலம் கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இன்று உத்தரவிட்டார்.
அத்துடன், இந்த வழக்கின் பிணையாளர்களை அடுத்த வழக்குத் தவணையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் பிறப்பிக்குமாறும் நீதிபதி மேலதிக உத்தரவைப் பிறப்பித்தார்.
