தமிழர்களின் சுயநிர்ணய  உரிமை மற்றும் இனப்படுகொலை விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவளிக்க வேண்டும்: அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் 

22 ஜனவரி 2026

ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரங்களுக்குப் பொறுப்புக்கூறல், இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை மற்றும் ஜனநாயக ரீதியிலான பொதுவாக்கெடுப்பு (Referendum) மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய  உரிமையை ஆதரித்தல் ஆகியவற்றுக்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் (US State Department) மீளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்   குழுவொன்று வலியுறுத்தியுள்ளது.

தமிழர்கள் தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வேளையில் இந்தத் வேண்டுகோள் வெளியாகியுள்ளது வந்துள்ளது. அத்துடன், கடந்த ஆண்டு தமிழ் தாயகத்தின் செம்மணி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழியில், குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உட்பட சுமார் 240 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது, எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டமைஇலங்கை அரசால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான கோரிக்கைகளை மீண்டும் தூண்டியுள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹெர்ப் கனவே (Herb Conaway)  வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

“தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் இவ்வேளையில், எனது சகாக்கள் நால்வருடன் இணைந்து இராஜாங்கத் திணைக்களத்திற்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளேன். ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய  உரிமையைஒரு ஜனநாயக பொதுவாக்கெடுப்பு மூலம் உறுதிப்படுத்துவதற்கும், இலங்கை யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதற்கும் அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு அக்கடிதத்தில் கோரியுள்ளோம்.”

2026 ஜனவரி 21 ஆம் தேதியிட்ட இக்கடிதம், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு (Marco Rubio) அனுப்பப்பட்டுள்ளது. செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி குறித்து அதில் “ஆழ்ந்த கவலை” தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இது தமிழ் மக்களுக்கு எதிரான போரின் போது இழைக்கப்பட்ட கொடூரங்களின் ஒரு “வலிமிகுந்த நினைவூட்டல்” என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் பாரிய மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். போரின் இறுதி மாதங்களில் மட்டும் 70,000 முதல் 147,000 வரையிலான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என இக்கடிதம் குறிப்பிடுகிறது.

அமெரிக்க நிர்வாகத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:

  • தமிழர்கள் “மரியாதை மற்றும் கண்ணியத்துடன்” நடத்தப்படுவதை உறுதிப்படுத்த அவர்களின் உரிமைகளுக்காக வாதிடுதல்.

  • ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய  உரிமையை பாதுகாத்தல் மற்றும் அவர்களின் உரிமைகளின் அடிப்படையில் நிரந்தர அரசியல் தீர்வை எட்ட, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயகப் பொதுவாக்கெடுப்பு (Referendum) முறைக்கு ஆதரவளித்தல்.

  • யுத்த காலத்தில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணையை ஆதரித்தல்; இதில் “இனப்படுகொலை” (Genocide) நடந்ததா என்பது குறித்த ஆய்வையும் உள்ளடக்குதல்.

  • சுயாதீனமான நீதித்துறை நடவடிக்கைகளை ஊக்குவிக்க அமெரிக்காவின் உலகளாவிய தலைமைத்துவத்தைப் பயன்படுத்துதல்.

பொறுப்புக்கூறல் என்பது வெறும் தார்மீகக் கடமை மட்டுமல்ல, அது அந்தத் தீவில் ஸ்திரத்தன்மை, மீண்டும் இத்தகைய கொடூரங்கள் நிகழாமை மற்றும் நீடித்த அமைதி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான அவசியமான நடவடிக்கை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு அருகிலுள்ள இலங்கையின் மூலோபாய இருப்பிடத்தை சுட்டிக்காட்டியுள்ள இக்கடிதம், தமிழர்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவதையும், தண்டனையிலிருந்து தப்பிக்கும் போக்கையும் (Impunity) சரிசெய்யாமல் நீண்டகால ஸ்திரத்தன்மையை அடைய முடியாது என்றும் வாதிடுகிறது.

வாஷிங்டனில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ மாற்றம், தமிழர்களின் உரிமைகள் சார்ந்து அமெரிக்கா ஏற்கனவே கொண்டுள்ள உறுதிப்பாடுகளை நீர்த்துப்போகச் செய்யக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்