2026 ஜனவரி 24 |
நாடாளுமன்றத்தின் பணியாளர் தொகுதி பிரதானியும் (Chief of Staff), பிரதிச் செயலாளர் நாயகமுமான ஜி.கே.ஏ. சமிந்த குமார குலரத்னவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்ய நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற வட்டாரங்களின்படி, அவரது நியமனம் தொடர்பாக எழுப்பப்பட்ட சில சிக்கல்களைத் தொடர்ந்து, இந்த பணியிடை நீக்கம் ஜனவரி 23 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
குலரத்ன 2023 செப்டம்பர் 15 முதல் இந்தப் பதவியில் கடமைகளை பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை