பிரகீத் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு பதவி உயர்வா?தவறை அனுர உடனடியாக திருத்தவேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போகச்செய்யப்பட்டமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கும் தவறான நடவடிக்கையை இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க உடனடியாக திருத்திக்கொள்ளவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஊடகவியலாளரும் கேலிச்சித்திரக் கலைஞருமான பிரகீத் எக்னலிகொட (Prageeth Eknaligoda) பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்தத் துயரமான ஆண்டுநினைவின் போது, கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் குற்றவியல் வழக்கின் ஒன்பதாவது பிரதிவாதியான இராணுவ புலனாய்வு அதிகாரி தெல்கே எரந்த ரதீஷ் பீரிஸ் (Thelge Erantha Radeesh Peiris), ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் பிரிகேடியர் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளமை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், சட்டமா அதிபர்  பீரிஸுக்கு எதிராக கொலைக் குற்றம் உட்பட 17 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைகளின்படி, 2009 ஆகஸ்ட் மாதம் எக்னலிகொட முதன்முறையாக பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்ட சம்பவத்திலும் அதிகாரி பீரிஸிற்குத் தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

கடுமையான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அதிகாரி பீரிஸிற்கு பதவி உயர்வு வழங்குவது நீதித்துறை அமைப்பைப் கேலிக்குள்ளாக்குவதுடன், இலங்கையின் சர்வதேச மனித உரிமைக் கடப்பாடுகளுக்கு முரணானது என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

மேலும், பல சவால்களுக்கு மத்தியிலும் உள்நாட்டு நீதிமன்றங்களில் நீதிக்காகத் தொடர்ந்து போராடி வரும் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவின் உறுதியான செயல்பாடுகளை இந்தப் பதவி உயர்வு ஊக்கமிழக்கச் செய்கிறது.

இந்தத் தவறான முடிவைத் திருத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்