வடமாகாண விவசாயக் கண்காட்சி முல்லையில் சிறப்புற இடம்பெற்றது; அனர்த்த இழப்பீடுவழங்கும் செயற்பாடும் ஆரம்பித்துவைப்பு.

வடமாகாண விவசாயக்கண்காட்சி முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிமனையின் ஒழுங்குபடுத்தலில் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் விவசாயப் பயிற்சி நிலையத்தில் 26.01.2026இன்று இடம்பெற்றது.
அத்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாணவிவசாயப் பணிப்பாளரின் தலைமையில் இடம்பெற்ற குறித்த விவசாயக் கண்காட்சியானது “காலநிலைச் சவால்களை எதிர்கொண்டு நிலைபேறான விவசாயத்தை நோக்கி” எனும் தெனிப்பொருளில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கடந்த டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகளை வழங்கும் செயற்பாடும் முதற்கட்டமாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறிப்பாக விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந்நிகழ்வில் தொடர்ந்து மங்கலவிளக்கேற்றல் என்பன இடம்பெற்றன.
அதனையடுத்து காலநிலைச் சவால்களை எதிர்கொண்டு நிலைபேறான விவசாயத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயக் கண்காட்சிகளை விருந்தினர்கள் பார்வையிட்டனர்.
அந்தவகையில் காலநிலை சவால்களை எதிர்கொண்டு நெற்பயிற்செய்கை மேற்கொள்ளல், தேனிவளர்ப்பு, காளான் வளர்ப்பு, சேதன உரத் தயாரிப்பு, கால்நடை வளர்ப்பு, சுதேசமருத்துவப் பயிர்ச்செய்கை, ஒருங்கிணைந்த விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விவசாய செயற்பாடுகள் குறித்து இதன்போது விருந்தினர்களுக்கு விளக்கங்களும் வழங்கப்பட்டிருந்தது.
மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், உபாலி சமரசிங்க, வடமாகாண பிரதமசெயலாளர் திருமதி.தனுஜாமுருகேசன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ, வடமாகாண விவசாயப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்