டிட்வா சூறாவளியின் (Cyclone Ditwah) தாக்கத்தால் 173 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக இடர் மேலாண்மை நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. இதில் அதிகளவானோர் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
-
கண்டி மாவட்டம்: இங்கு அதிகபட்சமாக 69 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இங்குதான் அதிகம் — மொத்தம் 243 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கேகாலை மாவட்டம்: இங்கு 38 பேர் காணாமல் போயுள்ளதுடன், 33 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
-
நுவரெலியா மாவட்டம்: இங்கு 32 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பதுளை மாவட்டம்: இச்சூறாவளியினால் அதிகப்படியான மக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பதுளை பதிவாகியுள்ளது. இங்கு 26,393 குடும்பங்களைச் சேர்ந்த 90,127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
