2026 ஜனவரி 30|
லங்காபுரொப்பர்டிவெப் (LankaPropertyWeb – LPW) வெளியிட்டுள்ள அண்மைக்கால நில விலை சுட்டெண் (LPI) 2025 அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் இலங்கையின் காணிச் சந்தை நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக கொழும்பு புறநகர்ப் பகுதிகள் மற்றும் மேல் மாகாண மாவட்டங்கள் இந்த வளர்ச்சியின் முக்கிய உந்துசக்திகளாக உருவெடுத்துள்ளன.

பிராந்திய ரீதியான விலை மாற்றங்கள்:
-
கொழும்பு மாநகரம் (1–15): சராசரி காணி விலை ஒரு பேர்ச் (Perch) 12 மில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4% வளர்ச்சியாகும்.
-
கொழும்பு புறநகர்ப் பகுதிகள்: ஒரு பேர்ச் சராசரி விலை 2.3 மில்லியன் ரூபாயை எட்டியுள்ளது, இது 8% வலுவான வளர்ச்சியைக் காட்டுகிறது.
-
கம்பஹா மாவட்டம்: சராசரி காணி விலை 15% அதிகரித்து 769,097 ரூபாயாக உயர்ந்துள்ளது.
-
களுத்துறை மாவட்டம்: சராசரி காணி விலை 10% அதிகரித்து 486,396 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதிக வளர்ச்சி கண்ட முக்கிய நகரங்கள்:
முதலீட்டாளர்களின் ஆர்வம் மலிவு விலை மற்றும் அபிவிருத்தி சாத்தியக்கூறுகள் கொண்ட புறநகர் நகரங்களை நோக்கி நகர்ந்துள்ளதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
-
யக்கல (கம்பஹா): 35% வளர்ச்சி – ரூ. 831,015 (ஒரு பேர்ச்)
-
ஹோமாகம (கொழும்பு புறநகர்): 35% வளர்ச்சி – ரூ. 916,912 (ஒரு பேர்ச்)
-
நீர்கொழும்பு (கம்பஹா): 35% வளர்ச்சி – ரூ. 1,561,925 (ஒரு பேர்ச்)
-
பண்டாரகம (களுத்துறை): 34% வளர்ச்சி – ரூ. 545,533 (ஒரு பேர்ச்)
-
பிலியந்தலை: 30% வளர்ச்சி – ரூ. 1,222,181 (ஒரு பேர்ச்)
கடுவலை, பன்னிபிட்டிய, மொரட்டுவ மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளும் 25% க்கும் அதிகமான விலை உயர்வைக் கண்டுள்ளன.
நகர மையங்களில் மந்தமான வளர்ச்சி:
கொழும்பு மாநகரின் மையப் பகுதிகளில் விலை உயர்வு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. கொழும்பு 10 பகுதியில் 25% வளர்ச்சியும் (ரூ. 14.5 மில்லியன்), கொழும்பு 4 பகுதியில் 17% வளர்ச்சியும் (ரூ. 18.8 மில்லியன்) பதிவாகியுள்ளன. அதேசமயம் கொழும்பு 6 மற்றும் கொழும்பு 13 ஆகிய பகுதிகளில் மிகக் குறைந்த அளவிலான மாற்றங்களே காணப்படுகின்றன.
உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் புதிய குடியிருப்புத் திட்டங்கள் அமைந்துள்ள பகுதிகளில் காணி விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன