விமானியின் எச்சரிக்கை: எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் கோளாறு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போயிங் விமானத்தை தரையிறக்கியது ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் (Dreamliner) விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் (Fuel control switch) கோளாறு இருக்கலாம் என அதன் விமானி ஒருவர் தெரிவித்ததை அடுத்து, அந்த விமானத்தை ஏர் இந்தியா தரையிறக்கியுள்ளது.

இது குறித்து திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (DGCA) தகவல் தெரிவித்துள்ளதாகவும், விமானியின் கவலைகள் குறித்து “முன்னுரிமை அடிப்படையில்” பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

“நாங்கள் ஏர் இந்தியாவுடன் தொடர்பில் இருக்கிறோம், இந்த விவகாரம் தொடர்பான அவர்களின் ஆய்வுக்கு ஆதரவளிக்கிறோம்,” என்று போயிங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 260 பேரின் உயிரைப் பலிவாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து (அதே ரக விமானம்) தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து புறப்பட்ட விமானம் பெங்களூருவில் தரையிறங்கிய பின்னரே இந்த கோளாறு கண்டறியப்பட்டதாக ராய்ட்டர்ஸ் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், வானில் எழும்பிய ஒரு நிமிடத்திற்குள்ளேயே விபத்துக்குள்ளானது. விபத்து குறித்த ஆரம்பகட்ட அறிக்கையின்படி, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் எரிபொருள் சுவிட்சுகள் ‘Run’ நிலையில் இருந்து ‘Cut off’ நிலைக்கு மாறியதால் எஞ்சின்கள் செயலிழந்தன எனத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இது எவ்வாறு நடந்தது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

விபத்திற்குப் பிறகு, இந்தியாவில் இயக்கப்படும் போயிங் 787 மற்றும் 737 ரக விமானங்களின் எரிபொருள் சுவிட்சுகளை ஆய்வு செய்யுமாறு இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தங்களது சோதனையில் சுவிட்சுகளின் பூட்டுதல் பொறிமுறையில் (Locking mechanism) எந்தக் கோளாறும் கண்டறியப்படவில்லை என்று ஏர் இந்தியா மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்