தேவைப்பட்டால் அவசர நிலக்கரி கொள்வனவை மேற்கொள்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிலக்கரி விவரக்குறிப்புகள் (Specifications) 2023 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டதாகவும், அதனை நாங்கள் செய்யவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். “உண்மையைத் தெரிந்துகொண்டு பொய்களைக் கூறாதீர்கள். நாங்கள் எந்த விவரக்குறிப்பையும் மாற்றவில்லை. அந்த விவரக்குறிப்புகள் சர்வதேசத் தேவைகளின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளனவே தவிர, அரசாங்கங்களின் தேவைக்காக அல்ல,” என்று அவர் கூறினார்.
மேலும், 2023 ஆம் ஆண்டிலிருந்து எந்தவொரு டெண்டர் நடைமுறையும் இன்றி, உலகில் எங்கும் நிலக்கரி விற்பனை செய்யாத பழைய அரசாங்கத்தின் நெருங்கிய உறவினர்களின் நிறுவனத்திடமிருந்து நிலக்கரி விநியோகம் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.