அரசாங்கத்தின் தேசப்பற்று என்பது தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்வதா?

2026 பெப்ரவரி 03 |

புதிய நிறுவனம் ஒன்றிற்கு தரம் குறைந்த நிலக்கரியை வழங்க இடமளிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும், தேசப்பற்றுள்ள அரசாங்கம் என கூறிக்கொள்ளும் அரசாங்கம் இவ்வாறுதான் நடந்துகொள்கிறதா என களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா (SJB) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“வளங்களைப் பகிர்ந்து கொள்ளும் கொள்கையை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் முன்வைத்துள்ள ஒழுங்குவிதிகளுக்கு எமது ஆதரவை வழங்குகிறோம். ஸ்ரீ லங்கா டெலிகொம் (SLT) நிறுவனம் ஒரு தனியார் நிறுவனத்திடம் கையளிக்கப்படுவதற்கு அல்லது கையகப்படுத்தப்படுவதற்கு இடமளிக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக ஊழியர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக 2022-2025 காலப்பகுதிக்குரிய நிலக்கரி கொள்வனவு தொடர்பான கொள்முதல் செயல்முறையை (Procurement process) மதிப்பீடு செய்வதற்காக தேசிய தணிக்கை அலுவலகம் விசேட தணிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒரு கொள்முதல் செயல்முறையின் போது பின்பற்ற வேண்டிய விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. தரமான நிலக்கரியை வழங்கக்கூடிய பல நிறுவனங்கள் உலகில் உள்ளன. அவ்வாறிருக்கையில், புதிய நிறுவனம் ஒன்றிற்கு தரம் குறைந்த நிலக்கரியை வழங்க இடமளிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டுள்ளது. தேசப்பற்றுள்ள அரசாங்கம் என்று கூறிக்கொள்ளும் நீங்கள் எவ்வாறு இவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்?”
எனஅவர் தெரிவித்தார்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்