காலனித்துவ காலத்தில் இடம்பெற்ற சொத்து சேதங்கள், திருட்டுகள் மற்றும் உயிர் இழப்புகளுக்காக பிரித்தானியாவிடம் (UK) இழப்பீடு கோர இலங்கை உத்தேசித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமது நாடுகளைக் காலனித்துவப்படுத்திய நாடுகளிடமிருந்து இழப்பீடு கோரும் சில ஆப்பிரிக்க நாடுகளின் முன்மாதிரியை இலங்கை அரசாங்கமும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.