சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெருமளவு சிறுவர்கள் மீண்டும் கல்வியை தொடர்வதற்காக பாடப்புத்தகங்கள் சீருடைகள் எழுதுபொருட்கள் போன்றவற்றிற்காக காத்திருக்கின்றனர் – ஐநா

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெருமளவு சிறுவர்கள் மீண்டும் கல்வியை தொடர்வதற்காக பாடப்புத்தகங்கள் சீருடைகள் எழுதுபொருட்கள் போன்றவற்றிற்காக காத்திருக்கின்றனர் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது
சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்த புதிய அறிக்கையில் ஐநா இதனை தெரிவித்துள்ளது.
சூறாவளியால் சிறுவர்களின் கல்விக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

  • ஏறத்தாழ 458,609 பாடசாலை வயதுக் குழந்தைகளும், 68,000 முன்பள்ளி வயதுக் குழந்தைகளும் மீண்டும் கல்வியைத் தொடர எழுதுபொருட்கள், பாடப்புத்தகங்கள், புத்தகப் பைகள் மற்றும் சீருடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கற்றல் உபகரணங்களை இன்னும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

  • சுமார் 900 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அவர்களுக்கு ஏற்ற விசேட கற்றல் உபகரணங்களும், 25 விசேட கல்விப் பிரிவுகளுக்கு பிரத்யேக கற்பித்தல் மற்றும் கற்றல் பொருட்களும் தேவைப்படுகின்றன.

  • ஏறத்தாழ 1,382 பாடசாலைகளும் 2,720 முன்பள்ளிகளும் பாதுகாப்பாக மீண்டும் திறக்கப்படுவதற்குத் தேவையான அத்தியாவசிய உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் சிறிய அளவிலான பழுதுபார்ப்புகள் அவசியமாகின்றன.

  • கடுமையாக சேதமடைந்த அல்லது முற்றாக அழிந்த பாடசாலைகள் குறுகிய காலத்தில் இயங்க வாய்ப்பில்லை என்பதால், அவற்றுக்குப் பதிலாக தற்காலிக கற்றல் இடங்களை (Temporary Learning Spaces) அமைக்க வேண்டியது அவசியமாகிறது.

  • மேலதிகமாக, தற்காலிகத் தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்பட்ட 500 பாடசாலைகள், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரங்களை உறுதி செய்வதற்காக முழுமையான துப்புரவு மற்றும் சிறிய பழுதுபார்ப்புகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். முற்றாக அழிந்த பாடசாலைகள், NBRI அமைப்பினால் பாதுகாப்பு என உறுதிப்படுத்தப்பட்ட இடங்களில் மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும் அல்லது இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.

  • நீண்டகால பாடசாலை விடுமுறைக்குப் பிறகு மாணவர்களின் இடைவிலகல் அபாயத்தைத் தடுக்கவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உள-சமூக நலனை மேம்படுத்தவும் சுமார் 28,900 ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் உடனடி வழிகாட்டுதலும் ஆதரவும் தேவைப்படுகிறது.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு