அரகலய போராட்த்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்அமரகீர்த்தி அத்துக்கோரல கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நீதிமன்றம் 12 பேருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கம்பஹா மேல் நீதிமன்றத்தின் விசேட நீதாய மேல் நீதிமன்றம் (Trial-at-Bar), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 2022 மே 9ஆம் திகதி ‘அரகலய’ போராட்டத்தின் போது, நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற கும்பல் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுடன் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
விசாரணைகளைத் தொடர்ந்து, இந்த கொலைச் சம்பவங்கள் தொடர்பாக 41 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
நீண்ட விசாரணைக்குப் பின்னர், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பை அறிவித்தது: 12 சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, 23 பேர் விடுவிக்கப்பட்டனர், மேலும் நான்கு பேருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது