கணினி அமைப்புக் கோளாறு இன்னும் சரிசெய்யப்படாததால், பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கோ அல்லது அதன் எந்தவொரு பிரதேச அலுவலகங்களுக்கோ நாளை வருகை தர வேண்டாம் என பொது பாதுகாப்பு அமைச்சு கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
சாதாரண சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (பிப்ரவரி 16) முதல் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வருகை தந்திருந்த அல்லது இன்று நேர்முகத்தேர்வுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்த (Appointments), ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணப்பப் பணிகளை முடிக்க முடியாமல் போன விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சேவைகள் வழமைக்குத் திரும்பும் வரை குடிவரவு அலுவலகங்களுக்குத் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அமைச்சு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது
