ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, போலி விசா ஆலோசனை மையத்தை நடத்தி வந்த இரண்டு இளைஞர்கள் நேற்று (12) கண்டி பகுதியில் வைத்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
கண்டி பகுதியில் ‘EGA விசா கன்சல்டன்சி’ (EGA Visa Consultancy) என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம், ஆஸ்திரேலியாவில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி 3.5 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டு, வேலையை வழங்கத் தவறியதாக கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்தே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அந்தப் புகாரின் அடிப்படையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, குறித்த நிறுவனம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முறையான உரிமம் இன்றி இயங்கி வந்தமையும், பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வந்தமையும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, கம்பளை மற்றும் தலத்துஓயா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சோதனையின் போது, அங்கிருந்த 7 வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள், 5 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் பல பணப் பற்றுச்சீட்டு புத்தகங்கள் (Cash receipt books) அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன
