இலங்கை அணியை பின்தொடரும் உலக கிண்ண காயங்கள்: மதீஷ வெளியேற்றம்,  வனிந்து குறித்து தீவிர ஆலோசனை

:இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண, இடது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு (Calf strain) காரணமாக 2026 T20 உலகக் கோப்பைத் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) இன்னும் வெளியிடவில்லை என்றாலும், அவர் விளையாடப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள இலங்கை அணிக்கு, மதீஷவின் காயம் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதனால் தேர்வாளர்கள் மாற்று வீரர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


மாற்று வீரர்களுக்கான தெரிவுகள்:

  1. தில்ஷான் மதுஷங்க (Dilshan Madushanka): மதீஷவிற்குப் பதிலாக அணியில் இணைவதற்கு இவருக்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.

  2. பினுர பெர்னாண்டோ மற்றும் நுவான் துஷார: இவர்களும் தேர்வாளர்களின் கவனத்தில் உள்ளனர்.

  3. மிலான் ரத்நாயக்க: பந்துவீச்சுடன் கீழ் வரிசையில் துடுப்பாட்டத்திலும் பலம் சேர்க்கக்கூடிய ஒரு ஒரு சகலதுறைவீரராக  இவர் பரிசீலிக்கப்படுகிறார்.


வனிந்து ஹசரங்க குறித்து முக்கிய முடிவு:

வனிந்து ஹசரங்கவை மீண்டும் அணியில் சேர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர் தனது தொடைத் தசை (Hamstring) காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்றாலும், தொடரின் பிற்பகுதியில் அவர் உடல் தகுதியை எட்டக்கூடும் என்பதால் அவரை மீண்டும் அழைக்கலாமா என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இலங்கை அணியின் கடைசி லீக் போட்டி ஒரு ‘dead rubber’ (முடிவு மாற்றத்தை ஏற்படுத்தாத போட்டி) என்பதால், சூப்பர் 8 சுற்று தொடங்குவதற்கு முன்னதாக மாற்று வீரர் குறித்த இறுதி முடிவை எடுக்க இலங்கை அணிக்கு போதிய கால அவகாசம் உள்ளது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா
Online1 loan
இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
plane121
விமானிகளுக்கு இடையே மோதல் - துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது
sajith 5
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்
iran war 10
மத்திய கிழக்கு பதற்றம் இலங்கையை 6 பொருளாதார முனைகளில் அச்சுறுத்துகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எச்சரிக்கை
imf srilanka
2027 உடன் முடிவடையும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் - அதன் பின்னர் என்ன நடைபெறும்- இலங்கைக்கான பிரதிநிதி கருத்து