இஸ்ரேலை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து 15 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய அவசரகால சேவையான மேகன் டேவிட் அடோம் (Magen David Adom) தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் பெண் ஊடகப் பேச்சாளர் கூறுகையில், காயமடைந்தவர்களில் 53 வயதுடைய நபர் ஒருவர் “ஓரளவு அதிக காயங்களிற்குள்ளாகியுள்ளார்
(moderate condition), ஏனைய 14 பேர் “லேசான காயங்களுடன்” (mild condition) உள்ளதாகவும் தெரிவித்தார்.
காயமடைந்த 15 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இது குறித்த மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.