இலங்கை செயற்கை நுண்ணறிவு வாரத்தின் (Sri Lanka AI Week) முதன்மை அங்கமான ‘தேசிய AI விருதுகள் 2026’ (National AI Awards 2026 – ‘AI Amplified’) க்கான விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI) இலங்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாக விரைவாக உருவெடுத்து வருவதுடன், உள்ளூர் தொழில்துறைகள் மற்றும் சமூகங்களின் திறனைப் புரட்சிகரமாக உயர்த்தி வருகிறது. இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு (Ministry of Digital Economy), எஸ்.எல்.டி-மொபிட்டெல் (SLT-MOBITEL) நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கும் இத்தேசிய AI விருதுகள் விழா, இலங்கை AI வாரத்தின் மிக முக்கிய அம்சமாக அமையும். இது AI இன் எதிர்காலத்தை வடிவமைக்கும் தலைவர்களையும் கண்டுபிடிப்பாளர்களையும் ஒன்று சேர்க்கிறது.
2026 ஒக்டோபர் 04 அன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இந்த விருது வழங்கும் விழா, கைத்தொழில், கல்வித்துறை, ஸ்டார்ட்அப் (startups) நிறுவனங்கள் மற்றும் அரச துறை ஆகியவற்றுடன் தொடர்புடைய செயற்கை நுண்ணறிவுத் துறையிலான சிறந்த உள்ளூர் சாதனைகளை வெளிப்படுத்தும். மேலும், இந்த விருதுகள் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதுடன், AI தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதிலும் அதன் சிறப்பிலும் தேசிய தரநிலைகளை கௌரவிக்கும்.
தேசிய AI விருதுகள், தொழில்துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி, புதிய சாத்தியங்களை வரையறுத்து, தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் தொலைநோக்குச் சிந்தனையாளர்கள், குழுக்கள் மற்றும் யோசனைகளைக் கொண்டாடி கௌரவிக்கவுள்ளது.
இவ்விருதுகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படவுள்ளன:
-
தேசிய AI முன்னோடி விருதுகள் (National AI Trailblazer Awards)
-
துறைசார் சிறப்பு விருதுகள் (Industry & Sector Excellence Awards)
-
கண்டுபிடிப்பு மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட விருதுகள் (Innovation & Future-Focused Awards)
-
ஆண்டின் சிறந்த AI உள்ளடக்க உருவாக்குநர்கள் (AI Content Creators of the Year)
AI துறையில் உயர்மட்ட தாக்கம் மற்றும் தலைமையை அங்கீகரிக்கும் வகையில், தேசிய விருதுகளில் பின்வருவன அடங்கும்:
-
தேசிய AI சிறப்பு விருது (National AI Excellence Award)
-
தேசிய AI தலைமைத்துவ சிறப்பு விருது (National AI Leadership Excellence Award)
-
தேசிய AI தாக்கச் சிறப்பு விருது (National AI Impact Excellence Award)
-
தேசிய AI ஏற்றுமதிச் சிறப்பு விருது (National AI Export Excellence Award)
முக்கிய துறைகளில் AI மாற்றத்தைக் கொண்டாடும் வகையில் வழங்கப்படும் கைத்தொழில் கண்டுபிடிப்பு விருதுகள் (Industry Innovation Awards) பின்வரும் துறைகளில் AI இன் முன்னோடி பயன்பாடுகளை அங்கீகரிக்கும்:

-
விவசாயம் (Agriculture)
-
உற்பத்தி மற்றும் தொழிற்துறை 5.0 (Manufacturing & Industry 5.0)
-
வங்கி, நிதி மற்றும் காப்பீடு (Banking, Finance & Insurance)
-
கல்வி (Education)
-
சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல்கள் (Healthcare & Life Sciences)
-
ஊடகம் (Media)
ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.aiexpo.lk/ai-awards என்ற இணையதள முகவரியின் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, இலங்கையின் AI பயணத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 2026 ஆகஸ்ட் 15 ஆகும்.