நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கான சட்டமூலம் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட வரைபிலிருந்து வேறுபடுவதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளதுடன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
வழமையான சட்டவாக்க நடைமுறையின் ஒருபகுதியாகவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன.
நிபுணர் குழுவினால் தயாரிக்கப்படும் வரைபை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு இல்லை, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் பரிசீலித்து மேலதிக முன்மொழிவுகளையும் திருத்தங்களையும் அமைச்சரவை உட்புகுத்தியுள்ளது.
நடைமுறைகளை இலகுவாக்குவதற்காகவே நிபுணர் குழுவை அரசாங்கம் நியமித்தது,சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதா