இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” – இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு

சர்வதேச கடற்பரப்பை கடந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை நிறுத்தவேண்டும் என இந்தியாவின் நிலைப்பாட்டை   கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் ஏனைய நாடுகளின் மீனவர்கள் தடைசெய்யப்பட்ட  மீன்பிடி முறைகளில் ஈடுபடுவதால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது என இலங்கை தொடர்ச்சியாக கரிசனை வெளியிட்டு வந்துள்ளதை கருத்தில் கொள்ளும்போது இந்தியாவின் இந்த நிலைப்பாடு முக்கியத்துவம்வாய்ந்தது.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்துவதால் கடல்சார் வளங்களுக்கும்  உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுகின்றது.
இலங்கையின் கடல்சார் வளங்களையும் சூழலையும் பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்தினுடையது.எங்கள் கடற்பரப்பிற்குள் இடம்பெறும் அத்துமீறல்கள் குறித்து நாங்கள் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்து வந்துள்ளோம்.
சர்வதேச கடல் எல்லையை மதிக்கும் அதேவேளை  இரு தரப்புமீனவர்களுக்கும் மீன்பிடிப்பதற்கும் வாழ்வாதாரத்திற்கும்  உள்ள உரிமையை பாதுகாப்பதும் முக்கியமானது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக காணப்பட்ட இராஜதந்திர புரிந்துணர்வின் அடிப்படையிலேயே கச்சதீவு மற்றும் கடல்சார் எல்லைகள் தொடர்பான உடன்படிக்கைகளில் இரண்டு நாடுகளும் கைச்சாத்திட்டனஇந்த விடயத்தில் இலங்கையின் நிலைப்பாடு தெளிவானது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்