அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை சவுதிஅரேபியா இரத்து செய்யவேண்டும் என அமெரிக்காவின் டொம் லன்டோஸ் மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் இரு கட்சிகளினதும் கூட்டு அமைப்hன டொம் லன்டோஸ் மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளதாவது
முகநூல் பதிவிற்காக சவுதி அரேபியா இலங்கையை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் 24 வயது அனோஜன் சிவராஜாவிற்கு மரணதண்டனை விதித்துள்ளது.
தண்டனை விதிப்பதற்கு முன்னர் அவர் சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு சவுதி அரேபிய அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை.
சவுதிஅரேபிய அதிகாரிகள் அவரது தண்டனையை இரத்து செய்து அவரை விடுதலை செய்யவேண்டும்.