விகாரமகாதேவி பூங்காவில் பௌத்தமதகுருமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதியில் கத்திகளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார்அந்த நபரை கைதுசெய்துள்ளனர்.
விசாரணைகளின் போது அந்த நபர் இராகமையை சேர்ந்தவர் என்பதும் அவர் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.