உக்ரைன் ரஷ்ய மோதலின்போது கொல்லப்பட்ட இலங்கையர் ஒருவரின் உடலை ரஸ்ய அதிகாரிகளிடம் கையளித்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவரின் பெயர் ரோகன் குமார் சுடி என தெரிவித்துள்ள உக்ரைன் அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் உடல்களை பரிமாறும் நடவடிக்கையின்போது இலங்கையரின்உடலை ரஸ்ய அதிகாரிகளிடம் கையளித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து இலங்கை அவரின் உடலை கையளிக்குமாறு ரஸ்யர்களிடம் உத்தியோகபூர்வ வேண்டுகோளை விடுக்கவேண்டும்
ரஷ்ய உயிரிழந்த வெளிநாட்டவர்களின் உடல்களை தங்கள் நாட்டிலேயே அடக்கம் செய்வது அல்லது தகனம் செய்வது வழமை என தெரிவித்துள்ள உக்ரைன் அதிகாரிகள் ரஸ்ய உக்ரைன் மோதலில் ரஸ்யா சார்பில் போரிட்ட 5000 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.