முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தற்போது விளக்கமறியலில் உள்ள மகன் நாமல் ராஜபக்சவிற்கு உருக்கமான கடிதமொன்றை எழுதியுள்ளார்.
அந்தக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது
2010 இல் நாமல்ராஜபக்ச முதன்முதலில் அரசியலில் நுழைந்தபோது தான் வழங்கிய அறிவுரைகளை மகிந்த ராஜபக்ச நினைவுகூர்ந்துள்ளார்.
நாமல்ராஜபக்ச அரசியலில் ஈடுபடுவதற்கு தன்னிடம் அனுமதியை கோரினார் அப்போது சிறைவாசம் துன்பங்களை எதிர்கொள்ள தயாராகயிருக்கவேண்டும் என கூறினேன்.
நீங்கள் அரசியலுக்கு வரவிரும்பினால் வாருங்கள் ஆனால் சிறைவாசத்தையும் துன்பத்தையும் எதிர்கொள்ள தயாராகயிருக்கவேண்டும் என தெரிவித்தேன்
நான் அரசியல் நுழைந்தவேளை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்ட சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இதனை தெரிவித்தேன்.
எனக்கு அவ்வேளை நீதித்துறை மாத்திரமே ஒரே நம்பிக்கையாகவும் ஆதாரமாகவும் இருந்தது,நீங்கள் தொடர்ந்தும் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்திருக்கவேண்டும்.யார் என்ன சொன்னாலும் நீதித்துறையின் மீது நம்பிக்கை வையுங்கள்
நானும் உங்கள் அம்மாவும் நீங்கள் பிறந்த நவலோக மருத்துவமனையிலேயே தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றோம்.யோசித்த மற்றும் ரோகித் ஆகியோர் எங்களை சிறந்த முறையில் கவனித்துக்கொள்கின்றார்கள்.
ரோகித கடற்படையில் இணைந்ததன் காரணமாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மீண்டும் அரசியலுக்கு திரும்பினால் உங்கள் அரசியல் எதிரிகளை பழிவாங்கவேண்டாம்,
பெற்றோரின் செயல்களுக்காக அரசியல் பிரமுகர்களை பழிவாங்க கூடாது,பெற்றோர்கள் செய்தவற்றிற்கு பிள்ளைகள் பொறுப்பல்ல,பழிவாங்காமல் இருப்பதே ராஜபக்ச பரம்பரையின் பாரம்பரியம்.
யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தபோதிலும் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக நியாயமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
எங்கள் குடும்பம் தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் இலங்கையர்கள் நன்றியுணர்வு மிக்கவர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள் என மகிந்த ராஜபக்ச நாமல் ராஜபக்சவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.