பொதுபலசேனாவின் ஞானசாரதேரரை விடுதலைசெய்யவேண்டும் என கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்தமதகுருமார் பௌத்தபீடங்களின் தலைமை மதகுருமாரின் வேண்டுகோளை தொடர்ந்து தங்களின் ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு ஞானசாரதேரரின் விடுதலைக்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக பௌத்தபீடங்களின் தலைமை மதகுருமார் கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளதை தொடர்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளதாக வெலப்பன சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.