ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு – பக்கச்சார்பற்ற விசாரணையை கோருகின்றது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த 29 வயது இளைஞன் உயிரிழந்தமை குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இளைஞன் உயிரிழந்த சூழ்நிலைகள் குறித்து பக்கச்சார்பற்ற உடனடி வெளிப்படையான விசாரணைகளை கோரியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது
இசாரா ஹர்சககுமார என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை போதைப்பொருள விசாரணை தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்தார்.
25ம் திகதி ஹோமாகம பொலிஸ்நிலையத்திற்கு தாங்கள் சென்றவேளை அவரின் உடலில் காயங்னகளை அவதானித்ததாக குறிப்பிட்டுள்ள உறவினர்கள் அந்த காயங்கள் அவர் மிகமோசமாக தாக்கப்பட்டுள்ளார் என்பதை புலப்படுத்தின என குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் பொலிஸ் பேச்சாளர் வேறுவிதமான தகவல்களை வெளியிட்டுள்ளார்,சந்தேகநபருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு முரண்பாடான தகவல்கள் வெளியாகியுள்ளதால் மரணம் நிகழ்ந்த சூழ்நிலையை உறுதிப்படுத்துவதற்கு நம்பகதன்மை மிக்க சுயாதீன விசாரணை அவசியம்.
அரசிற்கு பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் உயிர்களை உடல்நலத்தை பாதுகாக்கவேண்டிய அடிப்படை கடப்பாடுள்ளது,
பொலிஸ் காவலில் வன்முறை அல்லது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகளை பாரதூரமானவையாக கருதவேண்டும்,குற்றமிழைத்தவர்கள் யார் என்பது உறுதியானால் சட்டத்தின் கீழ் அவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

basil
மாத்தறை பிரவுண்ஹில் காணி வழக்கு – பசிலுக்கு பிடியாணை
Namal-Rajapaksa-2 (1)
எயார்பஸ்கொள்வனவு : நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
Ananda-Wijepala
பொலிஸார் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை கண்மூடித்தனமாக பயன்படுத்த முடியாது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
ranil 1
விவாகாரத்து விவகாரம் - 29 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு ரணில் வழங்கிய பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது எனநீதிமன்றம் தெரிவிப்பு
patrick brown1111
பிராம்ப்டனில் மூன்றாவது முறையாக மேயர் பதவியைக் கைப்பற்றினார் பேட்ரிக் பிரவுன்
ambika-satkunanathan
இலங்கையில் பொலிஸாரின் துஸ்பிரயோகங்களுக்கு நீண்டவரலாறு உள்ளபோதிலும் அரசாங்கம் அவர்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்க முயல்கின்றது – அம்பிகா சற்குணநாதன்
anojan
அனோஜனை சந்தித்தார் இலங்கை தூதுவர்
trump
டிரம்பின் உத்தரவு கிடைத்தால் ஈரான் மீது உக்கிரமான பெரும் தாக்குதல்நடத்த அமெரிக்கா திட்டம்
rajkumar rajeev
இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய கிருஷ்ணகுமார் எங்கே? இலங்கை அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும்!-ரஜீவ்காந்
benja 245
2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் முதல்தேர்தல்: இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப்போவது யார்?