சட்டத்திற்கு முரணான விதத்தில் செயற்படும் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது
பொலிஸார் சட்டத்திற்கு உட்பட்டே தங்கள் கடமைகளை செய்யவேண்டும்,அவர்கள் கண்மூடித்தனமாக அதிகாரங்களை பயன்படுத்தமுடியாது.
பொலிஸார் பொறுப்புக்கூறலிற்கு உட்பட்டவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் 1200க்கும் மேற்பட்ட பொலிஸார் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒருபொலிஸ்உத்தியோகத்தரின் தீர்மானம் அல்லது செயற்பாடு சட்டவிரோதமானதாக காணப்பட்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராகஉள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்