திங்கள்கிழமை நடைபெற்ற டொராண்டோமாநகராட்சி தேர்தலில் வாக்காளர்களின் பெருவாரியான ஆதரவுடன் பட்ரிக் பிரவுன் பிராம்ப்டனின் மேயராக மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
தற்போதைய மேயரான பட்ரிக் பிரவுன் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பிராம்ப்டன் மேயர் தேர்தலில் எளிதான வெற்றியைப் பெற்றார்.
தற்போதைய மேயரை வீழ்த்த 11 வேட்பாளர்கள் களமிறங்கிய போதிலும் இரவு 9:20 மணி நிலவரப்படி 164 வாக்குப்பதிவு மையங்களில் 134 மையங்களின் முடிவுகள் வெளியான போது பிரவுன் 55 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் 61038 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
முன்னதாக 2018 ஆம் ஆண்டு மேயர் தேர்தலில் போட்டியிட்ட வெஸ்லி ஜாக்சன் அந்த நேரத்தில் 21 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்று (21934 வாக்குகள்) இரண்டாமிடத்தைப் பிடித்தார். பிரப் கில் 12 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளுடன் (13079 வாக்குகள்) மூன்றாம் இடத்தைப் பிடித்தார். களத்தில் இருந்த மற்ற ஒன்பது வேட்பாளர்களில் எவரும் ஐந்து சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லை.

பிராம்ப்டன் மேயர் பிரவுன் கனடாவில் உள்ள தமிழ் சமூகத்திற்கு நீண்டகாலமாகத் தீவிர ஆதரவு வழங்கி வரும் ஒரு முக்கிய அரசியல் தலைவராவார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை “தமிழ் இன அழிப்பு” கீகரிப்பதிலும் தமிழ் சமூகத்தின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதிலும் இவர் முன்னின்று செயல்பட்டு வருகிறார்.
முக்கிய நடவடிக்கைகள் மற்றும் பங்களிப்புகள்:1. தமிழ் இன அழிப்பு நினைவகம்)திட்டம்: பிராம்ப்டன் நகரத்தில் மேயர் பட்ரிக்பிரவுனின் தலைமையிலான நகரசபை இலங்கையில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் ஒரு நினைவுச் சின்னத்தைக் கட்டியெழுப்ப அனுமதி வழங்கியது.திறப்பு விழா: மே 2025 இல் பிராம்ப்டனின் சிங்குவாக்கூசி பூங்காவில் 4.8 மீட்டர் உயரமுள்ள “தமிழ் இன அழிப்பு நினைவகம்” முறைப்படி திறக்கப்பட்டது. சர்வதேசம் மற்றும் இலங்கை அரசின் எதிர்ப்பு: இந்த நினைவகம் அமைக்கப்பட்டதற்கு இலங்கை அரசாங்கம் மற்றும் சில சிங்கள அமைப்புகள் பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்த போதிலும் மேயர் பிரவுன் இந்த நினைவகத்தை அமைப்பதில் உறுதியாக இருந்தார்.
2. “தமிழ் இன அழிப்பு நாள்” பிரகடனம்–பிராம்ப்டன் நகரசபை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் தேதியை “தமிழ் இன அழிப்பு நாள்” என அதிகாரப்பூர்வமாகப் பிரகடனம் செய்து மேயர் பிரவுன் உத்தரவு பிறப்பித்து வருகிறார்.
3. தமிழ் ஈழ தேசியக் கொடியை ஏற்றுதல்வட அமெரிக்காவில் உள்ள ஒரு மாநகராட்சியில் தமிழ் ஈழத் தேசியக் கொடியை ஏற்றித் தமிழ் சமூகத்திற்கு ஆதரவு தெரிவித்த முதல் மேயர்களில் பேட்ரிக் பிரவுன் ஒருவர்.
4. நீதி குரல்- பிரவுன் பல பொது மேடைகளிலும் தமிழ் மே மாத நினைவேந்தல் நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இன அழிப்பு தொடர்பாகச் சர்வதேச விசாரணை மற்றும் நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.